காந்தி நினைவுக் காட்சியகம் (Gandhi Memorial Museum) என்பது 1959 ஆம் ஆண்டு மதுரையில் நிறுவப்பட்ட மகாத்மா காந்திக்கு அஞ்சலியாக அமைந்த அருங்காட்சியகம் ஆகும். இந்தியாவில் உள்ள ஐந்து முக்கிய காந்தி அருங்காட்சியகங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.
இந்த அருங்காட்சியகம் காந்தி ஸ்மாரக் நிதி அமைப்பால் நிர்மாணிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 1921 ஆம் ஆண்டு, மகாத்மா காந்திஜி மதுரையில் முதன்முறையாக வேட்டி (loin cloth) அணிவதைத் தன் உடை முறையாக ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் உலகம் முழுவதும் அவர் ஒரு தனித்துவமான தலைவராக அறியப்பட்டார்.
இந்த அருங்காட்சியகத்தில், தேவகோட்டையைச் சேர்ந்த நாராயணன் சத்சங்கிக்கு காந்திஜி நேரடியாக எழுதிய கடிதம் அசல் நகலாக பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும், சுதந்திர போராட்ட வீரரும் கவிஞருமான சுப்ரமணிய பாரதிக்கு காந்திஜி அனுப்பிய பாராட்டு செய்தி இங்குப் பாதுகாக்கப்பட்டுள்ளது.